இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏழை-எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் இலவச திருமணங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி நடத்தி வைக்கப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் நேற்றுகாலை திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் சோழீஸ்வரர் கோவில் வளாகத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 9 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருமாங்கல்யம், பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, மிக்சி உள்பட பல்வேறு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. பின்னர் மணமக்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தாராபுரம் ஆர்.டி.ஓ.செந்தில் அரசன் தலைமை தாங்கினார்.
NEWS EDITOR : RP
Please follow and like us: