சந்தவாசல் அருகே உள்ள துரிஞ்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 47), கூலி தொழிலாளி. இவர் அடிக்கடி உடல் நலக்கோளாறால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி மதியம் இவர் பயிருக்கு வைத்திருந்த பூச்சி மருந்து (விஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக போளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முருகனின் மனைவி சுமதி சந்தவாசல் போலீசில் புகார் செய்தார்.
NEWS EDITOR : RP
Please follow and like us: