துபாயில் இருந்து சீனாவின் குவாங்சூ நகருக்கு எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் டெல்லிக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் இருந்த ஒருவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து அந்த பயணிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
NEWS EDITOR : RP
Please follow and like us: