அவினாசி அருகே கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த சீனிவாசன் மகன் யுவராஜ் (வயது 32). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் அய்யப்பன கோவில் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து குடிநீர் கேன் சப்ளை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் குடியிருந்த வீடு நீண்ட நேற்று காலை நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து வீட்டின் உரிமையாளர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார். அப்போது வீட்டிற்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் யுவராஜ் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவினாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து வந்து யுவராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீஸ் மோப்பநாய் அர்ஜுன் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் ேமாப்பம் பிடித்து அந்த வீதி முழுதும் சுற்றி வந்தது. பின்னர் அவரது வீட்டின் எதிர்புறம் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று திரும்பி வந்து படுத்துக் கொண்டது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் தடையவியல் நிபுணர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த ெகாலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் யுவராஜிக்கும், இவரை வேலையில் சேர்த்துள்ள நபருக்கும் அவருக்கும் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
NEWS EDITOR : RP