பாவூர்சத்திரத்தில் கண்தான விழிப்புணர்வு பிரசார பேரணி நடைபெற்றது. பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத் தலைவர் லட்சுமி சேகர் தலைமை தாங்கினார். முன்னாள் செயலாளர்கள் ரஜினி, சுரேஷ், ஆனந்த், முன்னாள் பொருளாளர் பரமசிவன், ஜெயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்தான விழிப்புணர்வு குழு தலைவர் அருணாச்சலம் வரவேற்றார். 15 பார்வையற்றவர்கள், 25 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 45 பேர் கலந்து கொண்டனர். பாவூர்சத்திரம் கண் தான விழிப்புணர்வு குழு நிறுவனர் கே.ஆர்.பி.இளங்கோ கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.
NEWS EDITOR : RP
Please follow and like us: