கோவாவில் அமைந்துள்ள அபோட் (Abbott) நிறுவனத்தின் ஆன்டாக்சிட் டைஜீன் மருந்துக்கு எதிராக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோவாவில் உள்ள அபோட் ஆலையில் தயாரிக்கப்படும் இந்த மருந்தை பயன்படுத்துவதை நிறுத்துமாறு நோயாளிகளைக் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் (டிசிஜிஐ) அறிவுறுத்தி உள்ளது. மேலும், அந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து மருந்துகளையும் அகற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பானது ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியிடப்பட்டு, பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில், இந்த மருந்தானது பாதுகாப்பற்றது மற்றும் எதிர்மறை சிக்கல் ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த மருந்தை எடுத்துக் கொண்டிருந்தால், அவர்கள் பயப்பட வேண்டாம் என்றும், மிக நீண்ட நாள்களுக்கு இந்த மருந்தை உட்கொண்டிருந்தால் மட்டும் அவர்கள் மருத்துவர்களை நாடலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளையில், டைஜீன் மாத்திரைகளை சாப்பிடுவது பாதுகாப்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மொத்த விற்பனையாளர்களுக்கு டிசிஜிஐ வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலில், அப்போட் நிறுவனத்தின் கோவா தொழிற்சாலையில் உற்பத்தியான இந்த குறிப்பிட்ட மருந்தை விற்பனையிலிருந்து நீக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவர்களும், சுகாதாரத் துறையில் இருப்பவர்களும், மிகவும் கவனமாக மருந்துகளை பரிந்துரைக்குமாறும், எந்த மருந்தை ஒரு நோயாளி எடுத்துக்கொண்டாலும் அதனால் ஏற்படும் நேர்மறை சிக்கல்களை உடனுக்குடன் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தும்படி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து கடந்த மாதம் லிமிடெட் ஆகஸ்ட் 11-ம் தேதி இந்த மருந்து தயாரிப்பை தானாக முன்வந்து திரும்ப பெறுவதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு தெரிவித்திருந்தது. அதன்படி கோவாவில் தயாரிக்கப்பட்ட அனைத்து வகை தயாரிப்புகளின் உற்பத்தியையும் தானாக முன்வந்து நிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மருந்தை, நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு, அடிவயிற்று வலி, வாயுத் தொல்லை போன்ற பல பிரச்னைகளுக்கு நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி Digene Gel Mint பாட்டில் மருந்து வழக்கமான சுவை (இனிப்பு) மற்றும் வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்ததாகவும், அதே பேட்சின் மற்றொரு பாட்டில் கசப்பான சுவை மற்றும் கடுமையான வாசனையுடன் வெள்ளை நிறத்தில் இருந்ததாகவும் வாடிக்கையாளர்கள் புகார் அளித்திருந்தனர்.
NEWS EDITOR : RP