பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கோவிந்தராஜ பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 31), கொத்தனார். இவரது மனைவி பிரியா. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட திருநாவுக்கரசு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்றுவலி தீரவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அவர் கடந்த மாதம் 28-ந் தேதி விஷ விதைகளை தின்றார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையிலும், அதனை தொடர்ந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
NEWS EDITOR : RP
Please follow and like us: