தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்து இருந்தது. இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்துவருகிறது. சென்னை அடையாறு, பட்டினப்பாக்கம், மந்தைவெளி, தியாகராய நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மாம்பலம், அசோக் நகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
NEWS EDITOR : RP
Please follow and like us: