மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சவுகான் தலைமையிலான மாநில ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் வருகிற நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இன்னும் நாட்கள் இருக்கும் நிலையில், ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரேதசத்தில் ‘ஜன் ஆசிர்வாத்’ என்ற யாத்திரையை பா.ஜனதா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. சத்னா மாவட்டம் சித்திரகூட் என்ற இடத்தில் யாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார். ம.பி.யில் உள்ள 230 பேரவை தொகுதிகளிலும் தேர்தல் பரப்புரை செய்ய இந்த யாத்திரையை பா.ஜனதா நடத்துகிறது.
ஜன் ஆசிர்வாத் யாத்திரையின் போது 678 பொதுகூட்டம் நடத்தப்பட உள்ள நிலையில் பாஜக தலைவர் பலரும் பங்கேற்கின்றனர். யாத்திரைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP