நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் ரூ.375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது.இதுவரை சுமார் 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீரென சந்தித்து பேசினார். நாளை காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் சுற்றுப்பயணத்தை துவங்க உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்தை போயஸ் தோட்ட இல்லத்தில் ஓபிஎஸ் சந்தித்துள்ளார்.
அத்துடன் ஜெயிலர் படம் இம்மாதம் 7ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. அதற்கான போஸ்டர் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
NEWS EDITOR : RP