திருவண்ணாமலை : வீடுகளை இடிக்க முயற்சி செய்வதை கண்டித்து பொதுமக்கள் 2-வது நாளாக நடத்திய போராட்டத்தில் கண்களில் கருப்பு துணியை கட்டி கோஷம் எழுப்பினர்..!!

Spread the love

திருவண்ணாமலை அருகில் உள்ள சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்று குடியிருப்புகளை இடிக்க முயற்சி செய்வதை நிறுத்தக்கோரி அகில இந்திய விவசாயிகள் மகாசபை, அகில இந்திய முற்ேபாக்கு பெண்கள் கழகம் சார்பில் நேற்று முன்தினம் தொடர் முழுக்க போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாவட்ட செயலாளர் மாலினி, அகில இந்திய விவசாயிகள் மகாசபை மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்கள் கண்களில் கருப்பு துணியை கொண்டு கட்டிக்கொண்டு நூதனமான முறையில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வீரப்பத்திரன் தலைமை தாங்கினார்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram