இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது அனிருத் இசையமைத்துள்ளார். ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகிறது.இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் பலத்த பாதுகாப்புடன் ஜம்முவில் உள்ள வைஷ்ணவ தேவி கோவிலுக்கு சென்றார். அவர் முகத்தை மறைத்தபடி கோயிலுக்குள் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. முன்னதாக பதான் படம் வெளியாவதற்கு முன்பும் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு அவர் சென்றார். ‘பதான்’ திரைப்படம் உலகளவில் ரூ.1,050 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
NEWS EDITOR : RP