தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்டிரல், சேத்துப்பட்டு, மாதவரம், வண்ணாரப்பேட்டை, கொளத்தூர், கேகே நகர், கிண்டி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதேபோல், பொன்னேரி, செங்குன்றம், புழல் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.
NEWS EDITOR : RP
Please follow and like us: