கேரள மக்களால் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் பண்டிகைகளில் ஓணம் பண்டிகை மிக முக்கியமானது. கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் ஓணம் கொண்டாடப்படுகிறது.சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாள மக்களும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, கேரளாவின் அறுவடை திருநாள் என்றும் அழைக்கிறார்கள்.
.அந்த வகையில் தமிழ்நாட்டிலும் ஓணம் பண்டிகை பல்வேறு பகுதிகளில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஓணம் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக மக்கள் தங்கள் பாரம்பரிய உடையணிந்து கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் கேரள மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இனிப்பு மற்றும் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.கோவிலுக்குள் பல வித பூக்கள் கொண்டு பூக்கோலம் போடப்பட்டுள்ளது.