நெமிலிச்சேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் இன்று காலை விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்த வழியாக வந்து கொண்டிருந்த போடி சென்னை ரெயில் நிறுத்தப்பட்டு ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து நெமிலிச்சேரி வழியாக சென்னை வந்து கொண்டிருந்த 6 விரைவு ரெயில்கள் நிறுத்தப்பட்டன.
விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தண்டவாளத்தை சரிசெய்த பிறகு ரெயில்கள் வழக்கம் போல் மீண்டும் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
NEWS EDITOR : RP
Please follow and like us: