காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்த 3 வயது பெண் குழந்தை வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் தனியார் குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வரும் சேலத்தை சேர்ந்த ஜலீல் பாஷா (வயது 42) குழந்தையிடம் பேச்சு கொடுப்பது போல் தனியாக அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. தொடர்ந்து கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் ஜலீல் பாஷாவை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் குழந்தையிடம் பாலியல் சீண்டலில்ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஜலீல் பஷாவை கைது செய்தனர்.இதை அறிந்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
NEWS EDITOR : RP