தலைநகர் டெல்லியில் இருந்து கடந்த 2ம் தேதி மும்பை நோக்கி ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்படது. விமானம் நடு வானில் சென்றுகொண்டிருந்தபோது விமானத்தில் இருந்த பயணி தன் அருகில் இருந்த பெண் பயணி மற்றும் விமான பணிப்பெண்களை செல்போனில் ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளார்.
பின்னர் விமானம் மும்பை சென்ற உடன் அந்த பயணியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் செய்த செயலுக்கு அந்த பயணி மன்னிப்புக்கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து அந்த பயணி மன்னிப்புக்கடிதம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டுமென டெல்லி மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இதை அறிந்த விமான ஊழியர்கள் அந்த பயணியை கண்டித்தனர். மேலும், அந்த பயணியின் செல்போனை ஆய்வு செய்துள்ளனர். அதில் விமான பணிப்பெண்கள் மற்றும் பெண் பயணியை ஆபாசமாக எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளன. இதனை தொடர்ந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை நீக்கிய விமான ஊழியர்கள் இது குறித்து அதிகாரிகளிடம் தகவல் கொடுத்துள்ளனர்.
NEWS EDITOR : RP