பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமர் அன்வார்-உல்-ஹக் கக்கர் தனது அமைச்சரவையில் சிறையில் உள்ள பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்கின் மனைவி முஷால் ஹுசைன் முல்லிக்கைச் சேர்த்துக் கொண்டார். பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.காஷ்மீர் பிரிவினைவாதியான யாசின் மாலிக் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று டெல்லி திகார் சிறையில் உள்ளார். மெகபூபா முப்தியின் சகோதரி, மறைந்த முப்தி முகமது சயீதின் மகள் ருபையா சயீதை கடத்தியது உள்ளிட்ட பல வழக்குகள் அவர் மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.
யாசின் மாலிக்கின் மனைவி முஷால் ஹுசைன் முல்லிக்கை காபந்து அமைச்சரவையில் சேர்ப்பது, பிரிவினைவாதிகளுடன் பாகிஸ்தான் நிற்கும் என்றும், பொருளாதாரம் திவால் ஆனாலும், கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் இந்தியாவுக்கு பாகிஸ்தான் அளித்த தெளிவான செய்தியாகும் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் டிஜிபி ஷேஷ் பால் வைத் தெரிவித்துள்ளார்.
NEWS EDITOR : RP