லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இப்படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அதன்படி, விஜய்யின் ‘லியோ’ படத்தில் வில்லனாக நடித்துள்ள சஞ்சய் தத்தின் லுக்கை வெளிப்படுத்தும் கிளிம்ப்ஸ் வீடியோவை அவரது பிறந்தநாளை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்பு படக்குழு வெளியிட்டது.
வீடியோவை பொறுத்த வரை தொடக்கத்தில் கழுகின் சப்தத்துடன் தொடங்குகிறது. அடுத்து ஒரு மாஸாக கூட்டத்துக்கு நடுவே சஞ்சய் தத் நடந்து செல்கிறார். ‘ஆண்டனி’ என பெயல் ஒலிக்க சஞ்சய் தத்தின் முழு முகமும் காட்டப்படுகிறது.
முறுக்கு மீசை, தாடியுடன் சிகரெட்டை பிடித்தபடி வணக்கம் வைக்கும் அவரது லுக்கும் பின்னணி இசையும் ரசிக்கவைக்கிறது. இந்த கிளிம்ப்ஸ் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படத்தில் சஞ்சய் தத் கதாபாத்திரத்தின் பெயர் ஆண்டனி தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சஞ்சய் தத்தின் லுக்கை வெளிப்படுத்தும் கிளிம்ப்ஸ் வீடியோவில் இடம் பிடித்திருந்த BGM ரசிகர்களை கவர்ந்த நிலையில், அந்த BGM-ஐ spotify-ல் இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், படத்தில் நடிக்கும் பிரபலங்களின் பிறந்தநாளை முன்னிட்டு இதே போன்ற கிளிம்ஸ் வீடியோக்கள் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், அடுத்த மாதம் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் (10 SEP ) , பிரியா ஆனந்த் (17 SEP) மற்றும் இயக்குநர் மிஸ்கின் (20 SEP) ஆகியோரின் பிறந்தநாள் அடுத்தடுத்து வருகிறது. இதனால் அடுத்த மாதம் லியோ படத்திலிருந்து 3 மாஸான அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு ஆக்.15 அன்று தயாரிப்பு நிறுவனம் புதிய கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது. இந்த, ‘ஹரோல்ட் தாஸ்’ என்கிற கிளிம்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வெளியானது.
NEWS EDITOR : RP