திருவண்ணாமலை மாவட்டத்தில் திருட்டுப்போன 20 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் போலீ்ஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் செல்போன்கள் காணாமல் போனதாகவும், திருட்டு போனதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் அந்தந்த போலீஸ் நிலையங்களில் புகார் செய்திருந்தனர். அந்த புகார்கள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு காணாமல் போன செல்போன்களை தேடி வந்தனர். அதன்படி ரூ.4 லட்சம் மதிப்பிலான 20 செல்போன்களை போலீசார் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அதன் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் சைபர் கிரைம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
NEWS EDITOR : RP