நாடு முழுவதும் உள்ள வசந்த் & கோ கிளைகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதில், அனைத்து முன்னணி வீட்டு
உபயோகப் பொருட்களும் மிகக்குறைந்த விலை மற்றும் தவணை முறை வசதியில் கிடைக்கும்.
வசந்த் & கோ நிறுவனம் மிகக் குறைந்த உத்தரவாதம், ஏராளமான பரிசுகள், மிகச் சிறந்த விற்பனை திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. இந்நிறுவனம் விரைவில் தனது 113-வது கிளையைத் தொடங்கவுள்ளது.
வசந்த் & கோ சுதந்திர தின தள்ளுபடி விற்பனையைத் தொடங்கியுள்ளது. இச்சிறப்பு விற்பனையில் அனைத்து முன்னணி வீட்டு உபயோகப் பொருட்களும் மிகக்குறைந்த விலையில், எளிய தவணை முறை வசதியுடன் வாங்க முடியும்.
43 இன்ச் ஹெச்டி ஆண்டிராய்டு டிவியை ரூ.1790 மாத சுலபத் தவணையிலும், 180 லிட்டர் ஃபிரிட்ஜை ரூ.900 மாதத் தவணையிலும், 6.5 கிலோ டாப் லோடிங் வாஷிங் மெஷினை ரூ.1125 மாதத் தவணையிலும் வாங்க முடியும்.
3 ஜார் மிக்ஸர் சாப்பர், 2 பர்னர் கேஸ் ஸ்டவ், இன்டக்ஷன் ஸ்டவ், 24 பொருட்கள் அடங்கிய டின்னர் செட் மற்றும் 3 லிட்டர் குக்கர் போன்றவற்றை ரூ.1947 விலையில் வாங்க முடியும். ஆப்பிள் ஐபோன், ஆப்பிள் மேக்புக் ஏர் போன்றவை கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கும்.
ரூ.789 மட்டும் செலுத்தி பிடித்த ஃபர்னிச்சரை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம். மீதத் தொகையை தவணையில் செலுத்தலாம். ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ஃபர்னிச்சர் வாங்கினால் ரூ.3999 மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்ச் இலவசமாகக் கிடைக்கும்.
ரூ.55 மட்டும் செலுத்து 55 இன்ச் எல்இடி டிவியை எடுத்துச் செல்லலாம் மீதம் தவணையில் செலுத்தலாம். அதேபோல ரூ.65 செலுத்து 65 இன்ச், ரூ.75 செலுத்து 75 இன்ச், ரூ.85 செலுத்தி 85 இன்ச் டிவிக்களை வாங்க முடியும். ரூ.50 மட்டும் செலுத்தி ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின், டிஷ்வாஷர், ஹோம் தியேட்டர் போன்றவற்றை சுலப தவணை முறையில் வாங்கலாம். முன்பணம் இல்லாமல் வாங்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வங்கிகள், ஃபைனான்ஸ் நிறுவனங்கள் மூலம் பொருட்களை வாங்கி தள்ளுபடி, கேஷ்பேக் பெற முடியும்.
பூஜ்ஜியம் சதவீத வட்டியிலும் பொருட்களை வாங்கலாம். வசந்த் & கோவின் 112 கிளைகளும் நேரடி கிளைகள் என்பதாலும், மக்களின் தேவையை அறிந்து பொருட்களை வாங்குவதாலும் எல்லா கிளைகளுக்கும் சேர்த்து ஒரே இடத்தில் கொள்முதல் செய்யப்படுகிறது.
நிறுவனத்தின் 46 ஆண்டுகால அனுபவம் நற்பெயர் காரணமாக கொள்முதலில் கிடைக்கும் சலுகைகளின் பெரும்பகுதி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால் மிகக் குறைந்த விலையில் பொருட்களை விற்க முடிகிறது.
NEWS EDITOR : RP