1947 ஆம் ஆண்டு காலனித்துவ ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து நமது நாடு சுதந்திரம் பெற்ற தினத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் விழாக்கள் களைகட்டும். இந்திய தேசிய கொடியின் நிறத்தை குறிக்கும் வகையில் மூவர்ண உணவு மற்றும் ஜூஸ் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தண்டாய் ஜூஸ் எப்படி செய்வது என்பது குறித்த அந்த வீடியோவில் பாதம், பிஸ்தா, முந்திரிப்பருப்பு, கசகசா, கருப்பு மிளகுத்தூள், உலர்ந்த ரோஜா இதழ்கள், பெருஞ்சீரகம்,
குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குங்குமப்பூ, மற்றும் உலர்ந்த ரோஜாவை தவிர்த்து மேலே உள்ள பொருட்களுடன் பால் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் குங்குமப்பூ, மற்றும் உலர்ந்த ரோஜாவை தேவையான நிறமிகள் சேர்த்தால் மூவர்ண ஜூஸ் ரெடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP