நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் மக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் ரைசென் மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி பிரபுராம் சவுத்ரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியின்போது தேசியக்கொடியை ஏற்றிய பின் பிரபுராம் சவுத்ரி சிறப்பு உரையாற்றிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மந்திரி பிரபுராம் சவுத்ரி நிலைதடுமாறி மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவரை மீட்டு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் உடல்நிலை சீரடைந்துள்ளது.
NEWS EDITOR : RP