லண்டன் நகரின் வீதியில் 77-ஆவது இந்திய மற்றும் பாகிஸ்தான் சுதந்திர நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அப்போது பிரபல பாடகர் விஷ் இந்தி திரைப்பட தேச பக்தி பாடலான Teri Mitti பாடலை பாடியுள்ளார். அப்போது அங்கு கூடியிருந்த இந்திய மக்களும் பாகிஸ்தான் மக்களும் ஒன்றாக ஆரவாரித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்திய கொடியையும், பாகிஸ்தான் கொடியையும் ஒரே இடத்தில் பார்க்க கிடைத்திருப்பது பெரு மகிழ்ச்சியை அளித்தாக அந்நிகழ்ச்சியில் பங்கேற்றோர் தெரிவித்துள்ளனர். அதோடு இந்த நிகழ்ச்சி மறக்க முடியாத நிகழ்வாக அமைந்ததாக கூறிய பங்கேற்பாளர்கள் பாடகர் விஷ்-ஐயும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வீடியொவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பாடகர் விஷ் இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் ஒன்றாட கொண்டாடும் சுதந்திர நாளுக்கு நல்வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார். இந்த பதிவு 1.7 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி வைரல் ஆகியுள்ளது.
NEWS EDITOR : RP