பெற்றோர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் இடையிலான இனிமையான தொடர்புகளின் புகைப்படங்கள் பெரும்பாலும் மக்களின் இதயங்களில் ஒரு அன்பான உணர்வை ஏற்படுத்தும் நிகழ்வாகவே இருக்கும். அந்த வகையில் டெக் பில்லியனர் எலான் மஸ்க் தனது மகன் எக்ஸ் உடன் விளையாட்டுத்தனமாக தற்காப்புக் கலை கற்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், மீண்டும் தனது தந்தையுடன் பகிரபட்டுள்ள இந்த புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதோடு, சில மணிநேரங்களிலேயே வைரலாகி, 14 மில்லியன் பார்வைகளையும் பெற்று ஏராளமான விருப்பங்களையும் கருத்துகளையும் தற்போது தொடர்ந்து பெற்று வருகிறது.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த எலான் மஸ்க் அதில், “எனது ஸ்பேரிங் பார்ட்னருடன் தற்காப்புக் கலைகளைப் பயிற்சி செய்கிறேன்” என பதிவிட்டிருந்தார். எலோன் மஸ்க் மற்றும் கனேடிய பாடகர் க்ரைம்ஸ் தம்பதியினருக்கு மகனாக கடந்த மே 4, 2020 அன்று பிறந்த லில் எக்ஸ். தன்னுடைய பெயருக்காகவே இணையத்தில் பிரபலாமான சிறுவன் ஆவார்.
NEWS EDITOR : RP