தமிழகத்தை பொருத்தவரை பால் விற்பனையில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. 5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.10 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த திடீர் விலையேற்றதால் டீக்கடை மற்றும் உணவகங்களில் டீ மற்றும் காபி போன்றவற்றின் விலை விரைவில் 2 ரூபாய் வரை உயரலாம் எனவும், பிங்க் நிறத்தில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பால் பாக்கெட்டை மஞ்சள் நிறத்தில் மாற்றலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
5 லிட்டர் எடை கொண்ட பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை ரூ.210க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று ரூ.10 அதிகரித்து ரூ. 220க்கு விற்பனையாகிறது. ஆவின் பால் விலை உயர்வால் டீக்கடை, உணவகங்களில் டீ மற்றும் காபி போன்றவற்றின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
news editor : rp