வேழமுடைத்து மலைநாடு என்றார் ஒளவையார். தமிழ்நாட்டிலுள்ள இரண்டு மலைத்தொடர்களிலும் – மேற்குத்தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி – உள்ள காடுகள் பல்லாயிரம் ஆண்டுகளாக யானைகளுக்கு உகந்த வாழிடமாக இருந்தன. இம் மலைகளைப் போர்த்தியிருக்கும் காடுகளில் இன்றும் யானைகள் வாழ்கின்றன. அண்மைக்காலம் வரை சமவெளிக் காடுகளிலும் இருந்தன.
வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இவை நம் காடுகளை உறைவிடமாகக் கொண்டிருந்தன. தூத்துக்குடிக்கு அருகிலுள்ள ஆயனடைப்பு என்கிற இடத்தில் 30,000 ஆண்டு பழமையான யானை தொல்லெச்சம் (fossil) ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. இமயத்தின் அடிவாரக் காடுகளிலிருந்து இலங்கை வரையில் காட்டானைகள் வாழ்ந்தன என்பதை இங்கு கண்டறியப்பட்ட தொல்லெச்சங்கள் காட்டுகின்றன.
யானைகளை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆக., 12ல் உலக யானைகள் தினம். வனப்பரப்பு குறைவது, யானைகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் பற்றாக்குறையும் யானைகள் அழிவுக்கு காரணமாகிறது.
NEWS EDITOR : RP