நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 4000-க்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியானது.
ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த “படையப்பா” திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்று இன்று வரை பேசப்படுகிறது. 24 ஆண்டுகளுக்கு பின் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.
முதல்நாளில் தமிழகத்தில் ரூ.29.46 கோடியையும் ஆந்திரம் மற்றும் தெலுங்கானாவில் ரூ.12.04 கோடியையையும் கர்நாடகத்தில் ரூ.11.92 கோடி, கேரளத்தில் ரூ.5.38 கோடி, வெளிநாடுகளில் ரூ.32.75 கோடி என ஒட்டுமொத்தமாக உலகளவில் இப்படம் ரூ.95.78 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியை அடுத்து நடிகர் விஜய், இயக்குநர் நெல்சனை தொலைபேசியில் அழைத்து தனது வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ’பீஸ்ட்’ என்ற படம் உருவாகிக் கொண்டிருந்த போது தான் ‘ஜெயிலர்’ கதையை நெல்சன் உருவாக்கினார்.
NEWS EDITOR : RP