தொழிலதிபர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த சுகேஷ் சந்திரசேகர், பல்வேறு வழக்குகள் தொடர்பாக டெல்லி மண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பிறந்தநாளையொட்டி உருகி உருகி தன் கைப்பட காதல் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
சிறையில் இருந்தாலும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதான சுகேஷ் சந்திரசேகரின் காதல் குறையவில்லை. காதலிக்கு அடிக்கடி கடிதம் எழுதுவார். இன்று (ஆகஸ்ட் 11) ஜாக்குலின் பெர்னாண்டஸின் பிறந்தநாள். சுகேஷ் சந்திரசேகர் தனது காதலிக்கு தன் கைப்பட காதல் கடிதம் எழுதி உள்ளார். இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
“இந்த பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீரும். நான் சீக்கிரம் வருவேன். அடுத்த வருடம் பிறந்தநாளை நாம் ஒன்றாகக் கொண்டாடுவோம். நான் அதை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்.
உலகம் பொறாமைப்படலாம். நீ என் செல்ல பொம்மை. நீ எனக்கு ஸ்பெஷல், நீ என் சூப்பர் ஸ்டார். நீ என் வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்தவள். பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடு. எதற்கும் பயப்பட வேண்டாம். நான் உனக்காக இருக்கிறேன். எனக்காக இன்னும் ஒரு துண்டு கேக் சாப்பிடு’ என கடிதத்தில் கூறி உள்ளார்.
NEWS EDITOR : RP