தமிழ்நாடு முழுவதும் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களை கண்டறியும் வகையில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பதியப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 1,428 ரேசன் கடைகளில் 17.18 லட்சம் குடும்ப அட்டைகள் பதிவாகியுள்ளன. இதில் முதற்கட்டமாக 704 ரேசன் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்ற கணக்கில் 1,730 சிறப்பு முகாம்கள் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் முதல் கட்ட முகாம் முடிவடைந்தது. இந்த முகாமில் 88.34 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள 724 ரேசன் கடைகளில் 5 -ம் தேதி முதல் தொடங்கி வரும் 16-ம் தேதி வரை விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறுகிறது. இதில் விடுபட்டவர்களுக்கு வரும் 17-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும்.இந்த இரண்டு முகாம்களிலும் விண்ணப்பிக்க தவறியவர்கள் 19.8.2023 மற்றும் 20.8.2023 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்குமாறும் அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தின் 2-வது கட்ட முகாம்கள் 5.8.2023 அன்று தொடங்கி 16.8.2023 வரை நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் கட்ட முகாமில் இதுவரை 59.86 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
NEWS EDITOR : RP