விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘குஷி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.
இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்துள்ள படம் ‘குஷி’. சச்சின் கெடகர், சரண்யா, முரளி ஷர்மா, லக்ஷ்மி, ரோகினி, வெண்ணெலா கிஷோர், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.படத்துக்கு ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். அண்மையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
காதல் டூ கல்யாணம் அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு படம் உருவாகியிருப்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது. தொடக்கத்தில் வரும் காதல் ரசிக்க வைக்கிறது. அடுத்து வரும் ட்விஸ்ட், தொடர்ந்து நிகழும் கல்யாணம், அதையடுத்து நிகழும் பிரிவுகள் என முழுக்க முழுக்க காதல்..கல்யாண பிரச்சினைகளை மையப்படுத்தி நகர்கிறது ட்ரெய்லர்.
இதற்கு எதுக்கு காஷ்மீர் படப்பிடிப்பு என்பதற்கான கேள்வி ஒருவேளை படத்தில் இருக்கலாம். இறுதியில் வரும் சென்டிமென்ட் டையலாக் க்ளைமாக்ஸில் இரு மனங்களும் இணையும் என்பதை குறியீடாக உணர்த்துகிறது. மொத்தமாக ட்ரெய்லர் கணிக்ககூடிய காட்சிகளாக சில இடங்களில் மட்டும் கவனிக்க வைக்கிறது. படம் செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது
NEWS EDITOR : RP