‘உங்கள் அம்மாவாக ஒரு வாரம்’ ~ மகன் கோய ஃபீனிக்ஸ் டோலனுடன் முதல் படத்தைப் பகிர்ந்த ‘இலியானா’..!!

Spread the love

‘கேடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை இலியானா. இப்படத்திற்கு பிறகு தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தவர் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடித்த போக்கிரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தார். அதன் பிறகு தெலுங்கிலும், இந்தியிலும் முன்னணி நடிகர்களுடன் கைக்கோர்த்த இலியானா பல ஆண்டுகளுக்கு பிறகு, இயக்குனர் ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் மீண்டும் தமிழில் நடித்தார். இப்படத்தில் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்ற இலியானா ‘இருக்கானா இடுப்பிருக்கானா’ என்ற பாடலுக்கு இடுப்பை ஆட்டி நடனம் ஆடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்தார்.

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவ்வாக இருக்கும் இலியானா அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு தன்னை பற்றிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் 16.3 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட இலியானா, கடந்த ஏப்ரல் மாதம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என பதிவிட்டு, சாதனை பயணம் தொடங்கி விட்டது என்ற வாசகம் அடங்கிய குழந்தையின் உடையை வெளியிட்டிருந்தார்.

நடிகை இலியானாவிற்கு திருமணமாகாத நிலையில், அவர் வெளியிட்ட இந்த பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தன்னை பின் ஆண் நண்பருடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை மட்டும் பகிர்ந்த நடிகை இலியான, அவர்தான் தனது கணவர் என்றோ., அல்லது காதலர் என்றோ அவரைப் பற்றிய வேறு எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.

இதற்கு பிறகு கடந்த ஜூன் மாதம் பதிவு ஒன்றை வெளியிட்ட இலியானா “கர்ப்பமாக இருப்பது மிகவும் அழகான, ஒரு ஆசீர்வாதம். நான் இதை அனுபவிக்கும் அளவுக்கு அதிர்ஷ்டசாலி என்று நான் நினைக்கவில்லை. அதனால் நான் இந்த பயணத்தில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக கருதுகிறேன். மேலும் நான் எப்படிப்பட்ட தாயாக இருப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது எனக்குத் தெரிந்ததெல்லாம், நான் ஏன் வயிற்றில் இருக்கும் இந்த குட்டி குழந்தையை மிகவும் நேசிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

இதனை தொடர்ந்து, கடந்த 1-ம் தேதி அன்று தனக்கு மகன் பிறந்ததாக இலியானா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். அதில் தூங்கிக்கொண்டிருக்கும் தனது குழந்தையின் கருப்பு மற்றும் வெள்ளை புகைப்படத்தை பகிர்ந்து ‘கோய ஃபீனிக்ஸ் டோலன்’ (Koa Phoenix Dola) என பெயர் சூட்டியுள்ளதாக பதிவிட்டிருந்தார். அதாவது கோயா ஃபீனிக்ஸ் டோலன் என்றால் போர்வீரன் அல்லது வீரம் கொண்டவர் என்று அர்த்தமாம். இந்த பெயரை அறிவித்தது மட்டுமின்றி “எங்கள் அன்பு மகனை இந்த உலகிற்கு வரவேற்பதில் நாங்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறோம். அதை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்றும் தெரிவித்திருந்தார். இலியானாவின் இந்த பதிவிற்கு நடிகர் ஹுமா குரேஷி, நர்கிஸ் ஃபக்ரி, அர்ஜுன் கபூர், விஷ்ணு கௌஷல், அதியா ஷெட்டி மற்றும் பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில், குழந்தை பிறந்து ஒரு வாரத்தை கொண்டாடும் விதமாக தனது குழந்தை தன் கை விரலை பிடித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு புதிய பதிவு ஒன்றை தன்னை பின்தொடர்பவர்களுக்காகவும், ரசிகர்களுக்காகவும் போட்டுள்ளார். அந்த பதிவில் படத்தின் குளோசப்பில், கோயா ஃபீனிக்ஸ் இலியானாவின் கையைப் பிடித்தபடி அவரது விரலைப் பிடித்துள்ளார். கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள இலியானா, “1 வாரம் உங்கள் அம்மாவாக என்று சிவப்பு இதய ஈமோஜியை போட்டு எழுதியிருந்தார்.

இலியானா கடைசியாக பாட்ஷாவின் ‘சப் கசாப்’ என்ற பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். குடிபோல் நடிகர் அஜய் தேவ்கன் தயாரித்த குக்கி குலாட்டி இயக்கிய தி பிக் புல் (2021) படத்திலும் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடித்தார். அவர் அடுத்ததாக ரன்தீப் ஹூடாவுடன் அன்ஃபெயர் அண்ட் லவ்லி படத்தில் நடிக்கிறார்.

இணையதளத்தில் அணுகப்பட்ட திருமணப் பதிவு விவரங்களின்படி, இலியானா இந்த ஆண்டு மே 13 ஆம் தேதி அன்று மைக்கேல் டோலனை திருமணம் செய்து கொண்டார். அதாவது இலியானா சமூக ஊடகங்களில் தனது கர்ப்பத்தை அறிவிப்பதற்கு நான்கு வாரங்களுக்கு முன்பு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், இலியானா ஒரு அலங்கரிக்கப்பட்ட அரங்கின் முன் வெள்ளை மணப்பெண் உடையில் தன்னைப் பற்றிய ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். ஆனால் அந்த படம் அவரது திருமணத்தில் இருந்ததா அல்லது சில போட்டோஷூட்டில் இருந்ததா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதேபோல், திருமண நடைபெற்ற இடம் மற்றும் பிற விவரங்கள் தெரியவில்லை. மேலு மவரது கணவர் மைக்கேல் டோலனைப் பற்றியும் அதிகம் அறியப்படவில்லை.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram