ஒரு திரைப்படத்தின் தயாரிப்பை போலவே… அப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளும் முக்கியமானது. குறிப்பாக உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாராகும் நாக சைதன்யாவின் 23 வது படத்தின் படப்பிடிப்பு, சம்பவம் நடைபெற்ற இடங்களில் படமாக்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை ‘கார்த்திகேயா 2’ படத்தினை பான் இந்திய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட்டாக்கிய இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்க உள்ளார். இப்படத்தினை தெலுங்கு திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கீதா ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தை மெகா தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்குகிறார்.
NC 23’ படத்தின் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பை இந்த மாதத்தில் தொடங்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குவதற்காக தயாரிப்பாளர்கள், அனைத்து தடை கற்களையும் அகற்றுவதற்கு தயாராக இருக்கிறார்கள். இதற்காக அவர்கள் படத்தின் முன் தயாரிப்பை தொடங்குவதற்கு ஒரு புதிய அணுகுமுறையை கையாண்டிருக்கிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக படத்தின் நாயகனான நாக சைதன்யா, இயக்குநர் சந்து மொண்டேட்டி மற்றும் தயாரிப்பாளர் பன்னி வாஸ் ஆகியோர் விசாகப்பட்டினத்திற்கு சென்றனர். அங்கிருந்து அவர்கள் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காரா மண்டலத்தில் உள்ள கே. மச்சிலேசம் எனும் கிராமத்திற்கு சென்றனர்.
அப்போது நடிகர் நாக சைதன்யா தான் நடிக்கவிருக்கும் படத்திற்காக ஸ்ரீகாகுளத்தில் உள்ள கிராமத்தில், மீனவர்களையும், மீனவ குடும்பங்களையும் சந்தித்து பேசினார். இதன் மூலம் தான் நடிக்கவிருக்கும் படத்திற்காக புதிய அணுகுமுறையை அவர் தொடங்கி இருக்கிறார். அங்குள்ள மீனவர்களையும், அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் சந்தித்து அவர்களின் கலாச்சாரம், வாழ்க்கை முறை.. ஆகியவை பற்றி விரிவாக கேட்டு தெரிந்து கொண்டார். இதன் மூலம் நாக சைதன்யா தான் ஏற்று நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்திற்காக புதிய முயற்சியை ஆரம்பித்திருக்கிறார்.
இது தொடர்பாக தயாரிப்பாளர் பன்னி வாஸ் பேசுகையில், ” இந்த படத்தின் கதையை ஹைதராபாத்தில் உட்கார்ந்து கொண்டு வேலை செய்யக்கூடாது என்பதில் இயக்குநர் உறுதியாகவும், ஆர்வமாகவும் இருந்தார். மக்கள் மற்றும் சூழலை ஆய்வு செய்து இந்த படத்தின் முன் தயாரிப்பை கவனத்துடன் முன்னெடுத்து வருகிறோம்” என்றார். இயக்குநர் சந்து மொண்டேட்டி பேசுகையில், ”இந்த கிராமத்திற்கு வருகை தந்து ஒவ்வொரு நிமிடத்தின் விவரங்களையும் உற்று கவனித்த பிறகு தான், எங்களின் முன் தயாரிப்பு பணிகள் தொடங்குகிறது” என்றார்.
நடிகர் நாக சைதன்யா பேசுகையில், ” இந்த கிராமத்திலுள்ள கதாபாத்திரங்களை சந்திக்கவும், அவர்களின் உடல் மொழியை படிக்கவும், கிராமத்தின் நிலவியல் அமைப்பை அறிந்து கொள்ளவும், அவர்களின் வாழ்க்கை முறையை புரிந்து கொள்ளவும் நாங்கள் இங்கு வருகை தந்திருக்கிறோம்” என்றார்.
தெலுங்கு திரையுலகில் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் படப்பிடிப்பை தொடங்கும் ஒரு நாயகன் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று மக்களுடன் உரையாடியது படக்குழுவினரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இது தவிர முன் தயாரிப்பு வேலைகளிலும் படத்தின் நாயகனான நாக சைதன்யா தன்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் ‘NC 23 ‘பட குழுவினர் மீனவர்களின் தொழில் சார்ந்த வாழ்க்கை முறையை புரிந்து கொள்ள அவர்களுடன் கடலுக்குள் சென்றனர். இந்த முழு பயணமும் ‘தி ஃபர்ஸ்ட் கட் டாக்குமெண்டேஷன்’ எனும் பெயரில் ஆவணப்படமாக தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இது ஒரு அற்புதமான பயணம் என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.
NEWS EDITOR : RP