ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் திருவள்ளூர் மாவட்டம், பெரியகுப்பம் மேம்பாலம் அருகே வசித்து வருகிறார். நேற்று இரவு இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது, அழுது கொண்டிருந்த தனது 2 மாத பெண் குழந்தைக்கு, பால் தருமாறு சுரேஷ் தனது மனைவியிடம் கூறியுள்ளார்.
அவரது மனைவி, குழந்தைக்கு பால் தராததால் ஆத்திரமடைந்த சுரேஷ், குழந்தையை தரையில் தூக்கி வீசியுள்ளார். இதில் குழந்தை காயமடைந்த நிலையில், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதைத் தொடர்ந்து, சுரேஷை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
NEWS EDITOR : RP
Please follow and like us: