ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் ‘முதலமைச்சரின் காலை உணவு திட்டம்’ விரிவாக்கம்..!!

Spread the love

தமிழகத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூலம் 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு நாள்தோறும் காலையில் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டம் அனைத்து அரசு தொடக்க பள்ளிகளிலும் விரிவுப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாணவருக்கும் காய்கறிகளுடன் 100 மி.லி. சாம்பார் மற்றும் 150-200 கிராம் உணவு வழங்கப்படும் எனவும், வாரத்திற்கு இரண்டு முறையாவது உள்ளூரில் கிடைக்கும் சிறுதானியங்களைக் கொண்டு காலை உணவு வழங்கப்படும் எனவும், மாணவர்களுக்கு காலை 8 மணி முதல் 8.50 மணி வரை உணவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வருகிற 25-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை திருக்குவளையில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதன்மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram