செல்போன் வேண்டுமென்றால் காலில் விழுந்து காலை முத்தமிடு என மிரட்டிய இளைஞர்..!!

Spread the love

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே கழக்கூட்டம் பகுதியில் ஒரு இளைஞரிடம்
இருந்து பறித்த செல்போனை திருப்பி தர வேண்டுமென்றால், வாலிபரின் காலை பிடித்து முத்தம் இடவேண்டும் என மிரட்டினார். மிரட்டலுக்குப் பயந்து அடிபணிந்த இளைஞர் அந்த ரவுடி இளைஞரின் காலில் பலமுறை விழுந்து காலில் அணிந்த ஷூ வில் முத்தமிட வைக்கும் காட்சி வைரலாக பரவியது.

இச்சம்பவம் திருவனந்தபுரம் நகர பகுதியில் உள்ள தும்பா காவல் நிலைய எல்லைக்குள் நடை பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தனிப்படை போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளது. கேங்க்ஸ்டர் ஏர்போர்ட் டேனி மற்றும் அவனது கூட்டாளிகள் டேனிக்கு உதவுவதற்காக பைக்கில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது வெளியான செல்ஃபோன் விடியோ காட்சிகளில் பதிவாகி உள்ளது .

முன்னதாக டேனி மற்றும் சிலருடன் அடி தடி ஏற்பட்டது. இதையடுத்து பைக்கில் வந்த
வாலிபர் ஒருவரை அனந்தபுரி மருத்துவமனை அருகே வைத்து கொடூரமாக தாக்கியபிறகு.
அப்போது அந்த வாலிபரின் கையிலிருந்த மொபைல் போன் ஐ பறித்த டேனி சொன்ன
இடத்துக்கு வந்தால் போன் தருகிறேன் என்றார். தொடர்ந்து அந்த இளைஞர் மொபைல்
போன் வாங்க டேனி சொன்ன பகுதியான தும்பா அருகே கரிமணல் பகுதிக்கு பைக்கில்
இரவில் வந்தார்.

மிரட்டலுக்குப் பயந்து இளஞ்சர் அவனது காலில் முத்தம் கொடுப்பதையும் அந்த விடியோ பதிவில் காணலாம். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் நடை பெற்று சில தினங்கள் ஆகியும் டேனி என்பவர் ஆளும் கட்சி ஆதரவாளர் என்பதால் அவர் மீது இன்னும் காவல்துறை நடவடிக்கை. எடுக்கவில்லை எனவும் பொது மக்கள் தரப்பில் சமூக வலைத்தளங்கள் மூலமாக இதற்கு கடும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர்.

அங்கு கும்பலுடன் காத்திருந்த டேனி அந்த இளைஞனை தன் அருகில் அழைத்தார். மொபைல் போன் வேண்டுமென்றால் என் காலில் விழுந்து வணங்குமாறு
கத்தினான்.அந்த இளைஞன் டேனியின் காலை மூன்று முறை காலை பிடித்து உள்ளார்.
தொடர்ந்து டேனி தகாக வார்த்தைகள் பேசி காலில் முத்தமிட சொன்னார். இல்லை
என்றால் அடிப்பேன் என்று சொன்னார்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram