பெண்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும் இந்த இடம்…. அரசு ஆரம்ப சுகாதார நிலையம்… இவர்கள் அனைவரும் கர்ப்பிணிகள்…. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கனிவான கவனிப்பால் இவர்கள் இங்கு படையெடுத்து வருகின்றனர்.
மருத்துவ சேவைகள் கட்டமைப்பில் நாட்டிலேயே மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறது தமிழ்நாடு. கிராமங்கள்தோறும் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களே இதற்கு சாட்சி. ஆரம்ப சுகாதார நிலையங்களில் சாதாரண காய்ச்சல், சளி முதல் மகப்பேறு மருத்துவம் வரை சிறப்பாக பார்க்கப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சேவை என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியான நிலையில், அவர்களின் ஒரே தீர்வு அரசு மருத்துவமனைகள் மட்டுமே. அதிலும், மகப்பேறு சிகிச்சைக்கா தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் லட்சக்கணக்கில் செலவாகும். இதனால், தமிழ்நாட்டில் மகப்பேறு மருத்துவத்தில் அரசு மருத்துவமனைகள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றன.
அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதற்கு அங்கு வரும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கையே இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
போச்சம்பள்ளியை அடுத்த பாரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்யப்படுகிறது. இதற்காக சுற்று வட்டாரம் கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வந்து செல்கின்றனர்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சுகாதார நிலையத்தில் அதிக அளவு பிரசவம் பார்க்கப்பட்டு வருகிறது. அதனை தற்போதுள்ள மருத்துவர்கள் பாதுகாத்து வருகின்றனர். சுகாதார நிலையத்தில் மாதத்திற்கு 5 அல்லது 6 பிரசவங்கள் நடைபெறுகின்றன.
கர்ப்பிணிகளை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கனிவோடு கவனிப்பதால் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் ஆர்வத்துடன் இந்த மருத்துவமனையையே நாடி வருகின்றனர் என தெரிவித்தார் மருத்துவர் விஜய். இதனால் நாளுக்கு நாள் கர்ப்பிணிகளின் வருகை கூடி வருவதாக தெரிவித்தார்.இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டட வசதி செய்து கொடுத்தால் அதிக எண்ணிக்கையில் கர்ப்பிணிகள் சிகிச்சை பெற முடியும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து காவேரிப்பட்டிணம் வட்டார மருத்துவ அலுவலர் தாமரைச்செல்வி யிடம்
கேட்டபோது, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அதிக அளவு கர்பிணிகள் வருவது இங்கு
மட்டுமே. இதற்காக வாரம்தோறும் நடைபெறும் ஸ்கேன் டெஸ்டுக்கு நேரடியாக நானே
வந்து ஸ்கேன் செய்து கொடுகிறேன். கர்பிணி பெண்கள் அதிக அளவு வருவது மகிழ்ச்சி
அளிக்கிறது என தெரிவித்தார்.
NEWS EDITOR : RP