மாமன்னன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் வடிவேலுக்கு புதிய திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அவர் நடிப்பில் தயாரான ‘சந்திரமுகி – 2’ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில், பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான ‘காதல்’ சுகுமார் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அந்த பெட்டியில் தனது சினிமா வாழ்க்கை குறித்த பல்வேறு சுவாரஷ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.
குறிப்பா அதில் நடிகர் வடிவேலுவால் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். தற்போது அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது
நான் வடிவேலுவின் தீவிர ரசிகன். அவரது மேனரிசங்களை அப்படியே செய்வது எனக்கு பிடிக்கும். அப்படி ஒருமுறை, ஒரு படத்தில் எனது குருநாதரான நடிகர் வடிவேலுவின் உடல்மொழியில் பொன்னம்பலத்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து நடித்தேன். அனலை அங்குதான் எனக்கு பிரச்சனை ஏற்பட்டது. அந்த படத்தில் நடித்ததற்கு பிறகு ஒருநாள் நகைச்சுவை நடிகர்கள் போண்டா மணியும், முத்துக்காளையும் வடிவேலு என்னைக் பார்க்க வேண்டும் என்று கூறியதாக சொல்லி வந்து அழைத்துச் சென்றனர். நானும் என் குருநாதரைக் நேரில் பார்க்கப்போகிறோம் என்ற ஆர்வத்தில் அவரை காண சென்றேன். அங்கு தனியறை ஒன்றில் வைத்து அவரை சந்தித்தேன்.
நான் அப்படி சொல்லி முடிப்பதற்ற்குள்ளாக திடீரென, என் பின்னால் இருந்து சிலர் தாக்கத் தொடங்கினர். அப்போது என்மீது தாறுமாறாக அடிவிழுந்தது. அவர்களிடம் கெஞ்சி அங்கிருந்து தப்பி வந்தேன். இவ்வாறு அவர் நடிகர் வடிவேலுவுடனான மோசமான அனுபவங்களை கூறியுள்ளார். தற்போது இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அப்போது அவர் என்னிடம், என்னைப்போலவே நடிக்கிறாய் என வெகுவாக பாராட்டினார். நானும் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தேன். பிறகு சிறிது நேரத்தில், நடிகர்கள் முத்துக்காளையும், போண்டாமணியும் அங்கிருந்து கிளம்பி விட்டனர். நானும் அவர்களோடு கிளம்ப தயாரான போது, வடிவேலு என்னை சிறிது நேரம் இருக்க சொல்லி, ஏன் நடுச்சா என்ன மாதிரிதா நடிப்பேன் என்று சொல்லி வருகிறாயாமே என்று கேட்டார். நான் அப்படியெல்லாம் சொல்லவில்லை… ஒரு படத்தில் வாய்ப்பு கிடைத்தது அதனால்தான் அப்படி நடித்தேன் அவ்வளவுதான். இனிமேல் உங்களைப்போல் நடிக்க மாட்டேன் என அவரிடம் கூறினேன்.
NEWS EDITOR : RP