விமானப்படை வேலையை விட்டுவிட்டு சினிமா துறைக்கு வந்த இயக்குநர், சைக்காலஜி த்ரில்லர் படத்தை இயக்கிஉள்ளார்.
‘கயல்’ ஆனந்தி நடிக்கும் படம் ‘ஒயிட் ரோஸ்’. ரஞ்சனி தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஆர்.கே.சுரேஷ் வில்லனாக நடிக்கிறார். ஜோஹன் ஷெவனேஷ் இசை அமைக்கிறார். இளையராஜா வி ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குநர் சுசி கணேசனிடம் அசோசியேட்டாக பணியாற்றிய ராஜசேகர் இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.ஆனந்தி இளம் மனைவியாக நடிக்கிறார். பல படங்களில் தனது சிறந்த நடிப்பால் நம்மைக் கவர்ந்துள்ள அவருடைய சினிமா பயணத்தில் இது சிறந்த படமாக இருக்கும். படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்துவருகின்றன” என்றார்.
படம் பற்றி அவர் கூறும்போது, “விமானப்படை வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தவன் நான். இந்தப் படத்தைச் சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியுள்ளேன். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கும். ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சாதாரணப் பெண், இப்படிப்பட்ட ஒரு மிருகத்திடம் மாட்டி எப்படி பிரச்சினைகளை எதிர்கொள்கிறார் என்பதைச் சொல்கிறோம்.
NEWS EDITOR : RP