வேலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் முதற்கட்டமாக 418 ரேஷன்கடைகளுக்கு கடந்த 24-ந் தேதி முதல் அனைத்து தாலுகாக்களிலும் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட முகாம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் குடும்ப அட்டை எண்ணிக்கையின் அடிப்படையில் அப்பகுதி மக்களுக்கு, விண்ணப்பம் பதிவு செய்யும் நாள், நேரம் மற்றும் முகாம் நடைபெறும் ஆகிய விவரங்கள் அடங்கிய டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. டோக்கன்களில் தெரிவிக்கப்பட்ட நாளில் விண்ணப்பம் பதிவு செய்யாத விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அடுத்த மாதம் 3,4-ந் தேதிகளில் அந்தந்த மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாமை விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்தி தங்களது விண்ணப்பங்களை, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாம்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம். NEWS EDITOR : RP
Please follow and like us: