குடோனில் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறின. இந்த வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 -க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பட்டாசு வெடிவிபத்தில் குடோனுக்கு அருகே உள்ள 3-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும், சில வீடுகளும் சேதமடைந்தன.படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
NEWS EDITOR : RP
Please follow and like us: