உலக புலிகள் தினவிழா ஆண்டு தோறும் ஜூலை மாதம் 29-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உலக புலிகள் தின விழா சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் புலிகளின் முக்கியத்துவம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தெரிவிக்கும் வகையில் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்தப் போட்டிகள் உடுமலை பழனி சாலையில் உள்ள ராஜலட்சுமி கெங்குசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்த மையங்களில் எல்.கே.ஜி. முதல் கல்லூரி வரையிலான மாணவ – மாணவிகள் 1,245 பேர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து ஓவியப் போட்டி காலை 10 மணி முதல் 12 மணி வரையில் புலி, வனநிலப்பரப்பில் புலிகள், புலி மற்றும் அதன் இரைவிலங்குகள், புலிகள் அழிவிற்கான காரணிகள் மற்றும் அச்சுறுத்தல்கள், புலிகள் வாழ்கின்ற பகுதியின் சூழ்நிலை என்ற தலைப்புகளில் நடைபெற்றது.
போட்டிகளை ஆனைமலை பகுதியில் காப்பக உதவி வன பாதுகாவலர் க.கணேஷ் ராம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடம் பிடிக்கும் மாணவ மாணவிகள் உள்பட அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி வருகின்ற 29-ந் தேதி ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் உடுமலை அலுவலகத்தில் நடைபெறுகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை வனச்சரக அலுவலர்கள் சிவக்குமார் (உடுமலை), தனபாலன் (காங்கயம்), சுரேஷ் கிருஷ்ணன் (திருப்பூர்), உயிரியிலாளர் மகேஷ்குமார் செய்திருந்தனர்.
இதையடுத்து கட்டுரைப் போட்டி மதியம் 12.15 மணி முதல் 1.30 மணி வரை நடைபெற்றது. இந்த போட்டியானது புலிகள் ஏன் தேசிய விலங்கு குறிப்பிடப்படுகிறது? வன நிலப்பரப்பில் புள்ளிகளின் முக்கியத்துவம் மற்றும் அதன் பாதுகாப்பு என்ற தலைப்புகளிலும் நடைபெற்றது.
NEWS EDITOR : RP