கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் நினைவாக, ஆண்டுதோறும் ஜூலை 26-ந்தேதியை கார்கில் வெற்றி தினம் என்று கொண்டாடி வருகிறோம். இந்த நாளில், போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று கார்கில் வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளுக்காக திருச்சி சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார்கில் போரின்போது வீரமரணம் அடைந்த, திருச்சியை சேர்ந்த மேஜர் சரவணனின் நினைவுத்தூணில் மலர் தூவி, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
NEWS EDITOR : RP
Please follow and like us: