சுவீடன் நாட்டில் அமைதி முறையில் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு அடிப்படை உரிமை அளிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் மதநிந்தனைத் தடைச் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஆா்ப்பாட்டங்களின் போது எந்த மதத்துக்கு எதிரான செயல்களையும் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், அரசின் அனுமதியுடன் சுவீடனில் நடைபெறும் ஆா்ப்பாட்டங்களின் போது முஸ்லிம்களின் புனித நூலாக கருதப்படும் திருக்குர்ஆன் எரிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் இஸ்லாமிய நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈராக்கிலிருந்து ஸ்வீடனில் தஞ்சமடைந்துள்ள சல்வான் மோமிகா என்ற கிறிஸ்தவரும், மற்றொரு இராக்கியரும் நேற்று முன்தினம் ஆா்ப்பாட்டம் நடத்தப்போவதாக சமூக ஊடங்கத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தனா். அரசின் அனுமதியுடன் ஈராக் தூதரகம் எதிரே நடைபெற்ற அந்த ஆா்ப்பாட்டத்தின் போது திருக்குரானை கொளுத்தப்போவதாகவும் அவா்கள் கூறியிருந்தனா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஈராக் தலைநகா் பாக்தாதிலுள்ள சுவீடன் தூதரகம் முன்னா் கடந்த வியாழன் அன்று அதிகாலை குவிந்த நூற்றுக்கணக்கானவா்கள் அந்த தூதரகத்தை அடித்து நொறுக்கியதுடன் தீ வைத்து கொளுத்தினா். இதற்கிடையே, திட்டமிட்டபடி சுவீடனிலுள்ள ஈராக் தூதரகம் எதிரே அந்த நாட்டு அதிகாரிகளின் அனுமதியுடன் அன்று ஆா்ப்பாட்டம் நடத்திய மோமிகா, திருக்குர்ஆனை அவமதித்தார்.
ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இதனை தடுக்கவில்லை. இதனை கண்டிக்கும் வகையில் ஈராக் நாட்டிற்கான சுவீடன் தூதர் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. அதேபோல் சுவீடனிலுள்ள ஈராக் தூதரும் உடனடியாக திரும்ப அழைக்கப்பட்டார்.
சுவீடன் நாட்டில் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்த அரசை கண்டித்து, ஈராக், ஈரான், லெபனான் உள்ளிட்ட நாடுகளில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. கடந்த வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையை முடித்துவிட்டு நூற்றுக்கணக்கானவா்கள் பங்கேற்ற இந்த போராட்டங்கள் அமைதியாக நடைபெற்றதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவித்தன.இந்த சூழலில், மற்றொரு ஐரோப்பிய நாடான நாா்வேயிலும், தலைநகா் கோபன்ஹேகனிலுள்ள இராக்கிய தூதரகத்தின் முன் தீவிர வலதுசாரி அமைப்பினா் திருக்குரான் மற்றும் ஈராக் தேசியக் கொடியை எரித்ததாக தகவல்கள் வெளியாகின. இதனைக் கண்டித்து ஈராக்கில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய நூற்றுக்கானோர் தலைநகா் பாக்தாதில் பலத்த பாதுகாப்பு மிக்க ‘பச்சை’ மண்டலப் பகுதிக்குள் நுழைய முயன்றனா்.எனினும், நாா்வே உள்ளிட்ட சா்வதேச நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ள அந்தப் பகுதிக்குள் ஆா்ப்பாட்டக்காரா்கள் நுழைவதை அங்குள்ள பாதுகாப்புப் படையினா் தடுத்து நிறுத்தினா்.
NEWS EDITOR : RP