நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வடமாநிலங்கள் பல மழை, வெள்ள பாதிப்புகளில் சிக்கி தவிக்கின்றன. இன்று (திங்கள்கிழமை) மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.யமுனையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும் வெள்ளம் போல் தண்ணீர் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் யமுனை ஆற்றின் நீர்மட்டம் 206.56 மீட்டராக உயர்ந்து மீண்டும் அபாய எல்லையைக் கடந்துள்ளது. நேற்று இரவு 10 மணி அளவில் யமுனையின் நீர்மட்டம் 206.44 மீட்டராக இருந்த நிலையில் இன்று காலை சற்றே அதிகரித்து அபாய எல்லையை தாண்டி உள்ளது.
NEWS EDITOR : RP
Please follow and like us: