நாட்டின் பல்வேறு அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் சில்லறை விற்பனையில் அரிசி விலை 11.5 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் அரிசி விலை 3 சதவீதம் உயர்ந்துள்ளது.
பண்டிகை காலம் வருவதால் உள்நாட்டில் அரிசிக்கான தேவையும் அதிகரிக்கும். இதனால் அரிசி விலை மேலும் அதிகரிக்கலாம். இந்த நிலை தொடர்ந்தால் உள்நாட்டில் அரசியின் விலையை கட்டுக்குள் வைக்க முடியாது.
உள்நாட்டில் அரிசி விலையைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதனை கருத்தில் கொண்டு பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து வர்த்தக துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பாசுமதி அல்லாத எந்த வகை அரிசியையும் ஏற்றுமதி செய்யக்கூடாது. ஏற்கெனவே, ஏற்றுமதிக்காக கப்பல்களில் ஏற்றப்பட்டுள்ள அரிசிக்கு இந்தத் தடை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP