வரும் 31ம் தேதி முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 4 மாவட்டங்களுக்கான கள ஆய்வுக் கூட்டம்..!!

Spread the love

கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வளர்ச்சித்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், வரும் 31ஆம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 4 மாவட்டங்களுக்கான கள ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கான கள ஆய்வுக் கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் நடைபெற உள்ளது.

இதில் பல்வேறு திட்டங்கள் குறித்தும், வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram