இயக்குvர் நாக் அஸ்வின் இயக்கியுள்ள ப்ராஜெக்ட் கே, திரைப்படம் தெலுங்கு திரையுலகில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் தற்போதைய பான்-இந்திய ஸ்டாராக வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் பாகுபலி புகழ் பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடிக்க, பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கதையின் நாயகியாக தோன்றி பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தயாரிப்பாளர்கள் தொடங்கியுள்ளனர்.
‘புராஜெக்ட்-கே’ படத்தின் தலைப்பு ஜூலை 20 அன்று சர்வதேச அரங்கில் அதாவது சான் டீகோ காமிக்-கான் நிகழ்வில் பிரமாண்டமாக வெளியிட தயாராகி வருகிறது. டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகி வரும் படம் என்பதால் படத்தின் தலைப்பு பொருத்தமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் பிரபாஸுடன் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், இயக்குநர் நாக் அஸ்வின், தயாரிப்பாளர் அஷ்வினி தத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். சமீபத்தில், பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்’ படத்தின் டீஸர் வெளியான நிலையில் தற்போது ‘புராஜெக்ட்-கே’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஜூலை 21ம் தேதி வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் முழு உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்தில் தீபிகா படுகோனின் தோற்றத்தில் ப்ராஜெக்ட் கே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நேற்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தாமதமாகி இரவு 10 மணிக்கு மேல் வெளியிடப்பட்டது. இந்த போஸ்டரில் தீபிகாவின் லுக் ஹாலிவுட் ரேஞ்சில் உள்ளது. அதாவது தீபிகா படுகோன் பழுப்பு மற்றும் சாம்பல் நிற உடையில் காணப்படுகிறார். அது போர் உடையை நமக்கு நினைவூட்டுகிறது. மேலும் மேக்கப் இல்லாத தோற்றத்துடன் காட்சியளிக்கும் தீபிகா படுகோனின் ப்ராஜெக்ட் கே ஃபர்ஸ்ட் லுக் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வார இறுதியில் சான் டீகோ காமிக்-கான் நிகழ்வில் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது. இதற்கிடையில், படத்தின் தயாரிப்பாளர்கள் தீபிகா படுகோனின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு திரைப்பட ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளனர். அடுத்த மூன்று நாட்களில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், பிரபாஸ் ஆகியோரின் ஃபர்ஸ்ட் லுக்களையும் தயாரிப்பாளர்கள் வெளியிடுவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
NEWS EDITOR : RP