சென்னையில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் மெட்ரோ ரெயில் மூலம் அலுவலகம், கல்லூரிகளுக்கு போக்குவரத்து நெரிசலின்றி சென்று வருகின்றனர். இந்நிலையில், சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் பணிமனை வரையிலான நீல நிற வழித்தடத்தில் மெட்ரோ சேவை இன்று காலை முதல் பாதிக்கப்பட்டுள்ளது. விம்கோ நகர் – விம்கோ நகர் பணிமனைக்கு செல்லும் தடத்தில் மின் விநியோகத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் மெட்ரோ சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனைசுங்கச்சாவடி மெட்ரோ முதல் விம்கோ நகர் மெட்ரோ வரையில் ஒருவழிப்பாதை மெட்ரோ தான் உள்ளது. இதனால், விம்கோ நகர் வரை 18 நிமிட இடைவெளியில் தற்போது மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.
விம்கோ நகர், திருவொற்றியூர் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். மின் விநியோக பிரச்சினையை சரிசெய்யும் பணிகளில் மெட்ரோ ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் வழக்கமான சேவை தொடரும் என்று மெட்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP