கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டில் வரத்து குறைவால் தக்காளியின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால் மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு அதிமாக விற்கப்படுகிறது.
தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு ரேசன் கடை மற்றும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனையை தொடங்கி உள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இருந்த போதிலும் வெளி மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்த பாடில்லை.
இந்த நிலையில், சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலையில் மாற்றமின்றி ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் 1 கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல வெங்காயம் – ரூ.20, சின்ன வெங்காயம் – ரூ.180, நவீன் தக்காளி – ரூ.110, உருளை- ரூ.30, பீன்ஸ் – ரூ.90, ஊட்டி கேரட் – ரூ.65-க்கு விற்கப்படுகிறது. பெங்களூர் கேரட்- ரூ.40, இஞ்சி – ரூ.230, பூண்டு – ரூ.210, வண்ண குடைமிளகாய் – ரூ.200, பட்டாணி – ரூ.190, பச்சை குடைமிளகாய் – ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.
NEWS EDITOR : RP